தாலிபான்களிடம் எங்கள் முகத்தை பார்க்க சொன்னோம்! அதற்கு அவர்கள் செய்த செயல்... காபூலில் 2 இளம் பெண்களுக்கு நேர்ந்த கதி.. வீடியோ
ஆப்கானிஸ்தானில் இரண்டு இளம்பெண்கள் வேலைக்கு சென்ற நிலையில் தாலிபான்கள் அவர்களை திருப்பி அனுப்பியதோடு அவர்களிடம் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காபூலை கைப்பற்றிய தாலிபான்கள் மொத்த நாட்டையும் தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். அங்குள்ள பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்போம் என தாலிபான்கள் கூறிய போதிலும் அவர்களின் தொடர்ச்சியான செயல் அவர்கள் மாறவேயில்லை என்பதையே காட்டுவதாக உள்ளது.
இந்த நிலையில் இரண்டு இளம்பெண்கள் பணிக்கு செல்லும் தாலிபான்களால் ஏற்பட்ட நிலையை விளக்கி வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் பேசுகையில், நாங்கள் ஜனாதிபதி மாளிகை முன்னால் உள்ளோம்.
பணியாளர்கள் வேலைக்கு திரும்பலாம் என தாலிபான்கள் கூறியதை தொடர்ந்து பணிக்கு செல்ல முயன்றோம். ஆனால் எங்களை தாலிபான்கள் அனுமதிக்காததோடு, அடுத்த அறிவிப்பு வரும் வரை உங்களுக்கு அனுமதியில்லை என்றனர்.
These two women were turned away from their work by Taliban. “The Taliban haven’t changed in 20 years but we are not the woman of 20 years ago, we want our full rights and we want the world to hear and help us.” pic.twitter.com/RD67cbmhIy
— Masih Alinejad ?️ (@AlinejadMasih) August 21, 2021
இதோடு எங்கள் முகத்தை பார்த்தே அவர்கள் பேசவில்லை, அந்த வழியாக சென்ற நபரை வைத்து எங்களிடம் பேச சொன்னார்கள். நேரடியாக எங்களிடம் பேசுங்கள் என சொன்னதற்கு, எங்களால் உங்களை பார்க்க முடியாது என்றனர்.
நாங்கள் பர்தா அணிந்திருந்தும் கூட இப்படி சொன்னார்கள். சொல்வதற்கே வருத்தமாக உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் பார்த்த தாலிபான்கள் தான் இப்போதும் உள்ளனர், அவர்கள் மாறவேயில்லை.
ஆப்கான் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறோம், நாம் அமைதியாக இருக்கக்கூடாது என கூறியுள்ளனர்.