உலகக்கிண்ணத்தில் கைகுலுக்க மறுத்த இந்தியா, பாகிஸ்தான் மகளிர் கேப்டன்கள்
மகளிர் உலகக்கிண்ணப் போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா, பாகிஸ்தான் அணித்தலைவர்கள் கைகுலுக்க மறுத்தனர்.
பந்துவீச்சு தெரிவு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டி கொழும்பில் தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் பாத்திமா சனா பந்துவீச்சை தெரிவு செய்தார்.
அதன் பின்னர் இந்திய அணித்தலைவர் ஹர்மன்பிரீத் கவுரும், பாத்திமா சனாவும் கைகுலுக்க மறுத்தனர்.
நடவடிக்கை
இந்திய ஆடவர் அணி ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்ததைத் தொடர்ந்து இது வந்துள்ளது. ஆடவர் அணி ஏற்கனவே இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
அதே சமயம் ஐசிசி வகுத்துள்ள மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ண வழிகாட்டுதல்கள், வீராங்கனைகளுக்கு இடையே கைகுலுக்கலை கட்டாயமாக்கவில்லை.
மேலும், அவர்களின் நடத்தை விளையாட்டின் உணர்வை நிலைநிறுத்தவில்லை என்றால், அணிகள் அல்லது வீராங்கனைகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |