6,300 அடி உயரத்தில் ஊஞ்சலில் ஆடிய இளம்பெண்கள்... அறுந்த சங்கிலி: பதறவைக்கும் ஒரு வீடியோ
ரஷ்யாவில் 6,300 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலிலிருந்து இரண்டு இளம்பெண்கள் தவறிவிழும் அதிரவைக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
மலை முகடு ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த அந்த ஊஞ்சலில் அமர்ந்து அந்த இரண்டு பெண்களும் ஆடிக்கொண்டிருக்க, திடீரென ஊஞ்சலைக் கட்டியிருந்த சங்கிலி அறுந்துவிட்டது.
அந்த பெண்கள் இருவரும் ஊஞ்சலிலிருந்து கீழே விழ, பார்த்துக்கொண்டிருந்தவர்கள், அவ்வளவுதான் அந்த பெண்களின் கதி என பதற, யார் செய்த அதிர்ஷ்டமோ, அந்த பெண்கள் அந்த மலைமுகட்டின் கீழ் கட்டப்படிருந்த மர பிளாட்பாரத்தால் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
6,300 அடி உயரத்திலிருந்து விழுந்து உடல் சிதறி பலியாகிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அந்த பெண்கள் சிறு கீறல்களுடன் தப்பி விட்டார்கள்.
பதறிப்போயிருந்த அவர்களது உறவினர்கள் அவர்கள் இருவரையும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல, பொலிசார் அந்த ஊஞ்சல் அமைக்கப்பட்ட பகுதியின் பாதுகாப்பு குறித்து விசாரித்து வருகிறார்கள்.