ஆப்கானிஸ்தானில் பெண்களின் தற்போதைய நிலை இதுதான்! சாலையில் செல்லும் போது பயமா இருக்கு... இளம்பெண் வெளியிட்ட வீடியோ
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு அங்கு பெண்களின் நிலை மிக மோசமாக உள்ளது என்பதை கூறி இளம்பெண் பத்திரிக்கையாளர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தலைநகர் காபூலை கைப்பற்றிய தாலிபான்கள் மொத்த நாட்டையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். செய்தியாளர்களை அவர்கள் சந்திக்கும் போது பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளிப்போம் என கூறினார்கள்.
ஆனால் சொன்ன வார்த்தையை மீறி தொடர்ந்து பெண்களுக்கு எதிராகவே நடந்து வருகின்றனர். ஆப்கானில் உள்ள பெண் பத்திரிக்கையாளர்கள் பலரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை தாலிபான்கள் எடுத்துள்ளனர். பர்தா அணியாததால் ஒரு பெண்ணை சமீபத்தில் தாலிபான்கள் கொலை செய்தனர்.
இந்த நிலையில் அங்குள்ள பெண்கள் நிலையை விளக்கி தங்களுக்கு உதவ வேண்டும் என இளம்பெண் பத்திரிக்கையாளர் வீடியோ மூலம் கோரியுள்ளார்.
"Streets are full of Taliban fighters. We are scared to step out"
— Masih Alinejad ?️ (@AlinejadMasih) August 20, 2021
This Afghan journalist from asking international organisations to help them. Taliban has made it impossible for many like her to even get out of their homes.
Don't forget Afghan women. History will judge you pic.twitter.com/o9zsemYuaM
அதில், எங்களால் எங்கள் பணியை செய்யமுடியவில்லை, அதுமட்டுமின்றி சாலையில் பெண்கள் பாதுகாப்பாக செல்ல முடியவில்லை. ஏனெனில் நகரம் முழுவதும் தெருக்களில் தாலிபான் தீவிரவாதிகள் நிற்கிறார்கள்.
இது பெண்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மனித உரிமை அமைப்புகள், பெண்கள் உரிமை அமைப்புகள், பத்திரிக்கையாளர்களை பாதுகாக்கும் அமைப்புகள் போன்றவைகள் பெண்கள் இங்கு எந்த சூழலில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கிறீர்கள் என நினைக்கிறேன், எங்களுக்கு உதவுங்கள்.
என்னை போன்ற பல பெண்களை வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலைக்கு தாலிபான்கள் ஆளாக்கியுள்ளனர் என வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார்.