மனைவியின் கன்னத்தில் அறைத்த கணவர்! டிக் டாக் லைவ்வால் வந்த பிரச்சனை
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இளம்பெண், தன் நண்பர்களோடு டிக்டாக் லைவ்வில் பேசிக்கொண்டிருந்த போது, அந்த இளம்பெண்ணை அறைந்த அவரது கணவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டிக்டாக் லைவ்வில் அறை
ஸ்பெயின் சொரியா மாகாணத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது டிக்டாக் நண்பர்களோடு லைவ் ஸ்டீரிமிங்கில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது ஆத்திரமடைந்த அவரது கணவர் அவரை பளார் என அறைந்துள்ளார். அந்த பெண் வீடியோ டிக்டாக் லைவ்வில் இருந்ததால் அதனை பலரும் பார்த்திருக்கிறார்கள்.
@youtube
மேலும் இந்த வீடியோ ஸ்பெயின் நாட்டில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென ஒரு கை வந்து அறையும் போது நிலை தடுமாறிப் போன பெண் என்ன பேசுவதெனத் தெரியாமல் லைவ்வில் கண் கலங்கியுள்ள சம்பவம் அனைவரையும் உருக வைத்துள்ளது.
ஓராண்டு சிறை
தனது கணவர் அறைந்த பின்னும் அவரது மனைவி அவர் மேல் எந்த புகாரும் அளிக்கவில்லை. ஆனாலும் ஸ்பெயின் நீதிமன்றம் மனைவியைக் கொடுமைப்படுத்தியாக கூறி ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் கணவர் மனைவியிடமிருந்து 300 அடி தள்ளியே தான் இருக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளது. கைது செய்யப்பட்ட அவரது கணவர் இனி ஆயுதங்கள் வாங்குவதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.