தென்ஆப்பிரிக்காவில் புதிய வரலாறு படைத்த இலங்கை பெண் சிங்கப்படை!
மகளிர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை வென்று இலங்கை அணி புதிய வரலாறு படைத்தது.
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஈஸ்ட் லண்டனில் நடந்தது.
முதலில் துடுப்பாடிய தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் வோல்வார்ட் 56 (47) ஓட்டங்களும், நாடினே டி கிளெர்க் 44 (25) ஓட்டங்களும் எடுத்தனர்.
It all comes down to this!
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 3, 2024
It's 1-1 in the series, and the final T20 is set to roar! Who will claim victory and the series win? #GoLanka #LionessesRoar pic.twitter.com/ksgwYjlYzn
இலங்கை அணியின் தரப்பில் சுகந்தா குமாரி 3 விக்கெட்டுகளும், பிரியதர்ஷினி, ப்ரபோதனி மற்றும் கவிஷா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி சமரி அதப்பத்து (73), ஹர்ஷிதா சமரவிக்ரமா (54) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால், 19.1 ஓவரில் இலக்கினை எட்டி வெற்றி பெற்றது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, தென் ஆப்பிரிக்காவில் புதிய வரலாறு படைத்தது.
இந்த வெற்றி குறித்து எக்ஸ் பக்கத்தில், 'தென் ஆப்பிரிக்காவில் எங்கள் மகளிர் அணிக்கு இது ஒரு வரலாற்று முதல் தொடர் வெற்றி! அவர்களின் அசாத்திய சாதனைக்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்' என இலங்கை கிரிக்கெட் பதிவிட்டுள்ளது.
Champions! ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 3, 2024
Sri Lanka Women's seal historic T20I series win in South Africa! ?? #LionessesRoar
Chamari Athapaththu and Harshitha Samarawickrama were phenomenal, guiding us to a thrilling victory in the final T20I by 4 wickets! #SheRoars✨
This is a historic first ever… pic.twitter.com/D1qwdLahE4
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |