மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடற்பயிற்சி செய்வது நல்லதா?
பொதுவாக உடற்பயிற்சி நிறைய உடல் மற்றும் மனநல நன்மைகளை அளிக்கிறது.
அதிலும் மாதவிடாய் சமயத்தில் உடல் ஏற்கனவே நிறைய ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பதால் , வயிற்று வலி, வயிற்று மந்தம், சோர்வு, தலைவலி போன்ற பிரச்னைகளை சந்திக்ககூடும்.
இவற்றில் இருந்து விடுபட உடற்பயிற்சி பெரிதும் உதவுகின்றது. அந்தவகையில் மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லதா என்று தெரிந்து கொள்வோம்.
உடற்பயிற்சி செய்யலாமா ?
தீவிரமான உடற்பயிற்சிகள் செய்யவில்லை என்றாலும் நீட்சி பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளும் போது பதட்டத்தை குறைக்க முடியும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்.
மாதவிடாய் காலங்களில் உடற்பயிற்சி செய்வது மாதவிடாய் வலியை குறைக்க உதவி செய்யும்.
நன்மைகள் என்ன?
-
மாதவிடாய் காலத்தில் சோகம், எரிச்சல் அல்லது கோபம் போன்ற உணர்வுகள் இருக்கும்போது, உடற்பயிற்சி செய்வது மனநிலையை மேம்படுத்த உதவும்.
- மாதவிடாய் காலங்களில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் சோர்வு உணர்வுகளை அதிகரிக்கிறது. இதனால் மாதவிடாய் சுழற்சி முழுவதும் சில பெண்கள் மந்தமாக இருப்பார்கள். ஆனால் உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்த நாட்களிலும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
- மாதவிடாய் சுழற்சி நாட்களில் ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது போதுமானது. திவிரமான உடற்பயிற்சி மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம். இது எடையை கச்சிதமாக வைத்திருக்க உதவுவதோடு இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.