நீண்ட காலத்திற்கு முன் செய்த குற்றத்திற்கு கேட்கப் பட்ட கருணை கொலை! உளவியலாளர்கள் கூறும் காரணம்
பெல்ஜியம் நாட்டில் தனது ஐந்து மகள்களைக் கொன்று விட்டு, 16 ஆண்டுக்காலம் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பெண்மணி, திடீரென தன்னை கருணை கொலை செய்யச் சொல்லி, இறந்த பெண்மணியின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளைகளைக் கொன்ற தாய்
56 வயதான ஜெனிவிவ் லெர்மிட், பிப்ரவரி 28, 2007 அன்று, நிவெல்லஸ் நகரில் தனது கணவர் மற்றும் ஐந்து குழந்தைகளோடு வசித்து வந்தார். தனது கணவர் வெளியே சென்ற பின்பு தனது ஐந்து குழந்தைகளையும், சமையலுக்குப் பயன்படும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
@AP/Yves Herman
மேலும் தன்னுடைய உயிரையும் மாய்த்துக் கொள்ள நினைத்தவர், பிறகு மனமாறி தற்கொலைக்கு எதிரான அமைப்பின் எண்ணுக்கு அழைத்துப் பேசியுள்ளார். இதன் பின் பெல்ஜியம் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையை அறிவித்துள்ளது.
கருணைக் கொலை
தண்டனை காலத்தைச் சிறையில் கழித்துக் கொண்டிருந்த தாய் பல வருடங்கள் தான் செய்த குற்றத்தை எண்ணி நிறைய உளவியல் சிக்கல்களைச் சந்தித்துள்ளார்.அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மனநல மருத்துவனைக்கு மாற்றப்பட்டார். ஜெனிவிவ் லெர்மிடினின் வழக்கறிஞர் அவர் இறந்து விட்டதாகக் கூறியிருக்கிறார். கருணைக்கொலையை வேண்டிய அவருக்கு மருத்துவமனையில் ஊசி மூலம் கருணை கொலை செய்யப்பட்டது என அறிவித்துள்ளார். தனது பிள்ளைகளைக் கொன்ற 16வது ஆண்டின் நினைவு நாளில், அந்த பெண்மணி திட்டமிட்டு தன்னை கருணை கொலை செய்யச் சொல்லி, தன்னுடைய தவற்றுக்கான தண்டனையைத் தானே பெற்றுக்கொண்டார் எனக் கூறப்படுகிறது.
@AP/Yves Herman
கருணை கொலைக்கான காரணம்
பெல்ஜியமில் உடல் ரீதியாக மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்கள்,முக்கியமாக புற்றுநோய் போன்ற நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களே முன் வந்து தங்களைக் கருணை கொலை செய்து வைக்குமாறு வேண்டுவார்கள். ஜெனிவிவ் லெர்மிடின் உளவியல் ரீதியாக மிகவும் மோசமான மனநிலைக்கு ஆளாகியிருக்கலாம். அதனால் தானே முன் வந்து கருணை கொலை செய்யுமாறு வேண்டியிருக்கலாம் என மனநல மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
பொதுவாக கருணை கொலையால் இறக்கும் மனிதனின் வேதனையான இறுதி இரண்டு வார்த்தையாக 'இருண்ட நாள்':என்ற சொல் இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு முதல், பெல்ஜியம் குழந்தைகள் மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டிருந்ததால் மற்றும் மிகுந்த வலியில் இருந்தால் கருணை கொலை செய்து கொள்ளலாம் என்ற சட்டம் இருந்திருக்கிறது.