கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்: தமிழக அரசின் புதிய அப்டேட்
தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மகளிருக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது.
திமுக அரசு ஆட்சியில் இருக்கும் வரை இந்த பணம் செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் புதிய அப்டேட்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவோரின் வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும்.
மேலும் ஜி.எஸ்.டி., சொத்து வரி, தொழில்வரிகள் உள்ளிட்ட தரவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
காலாண்டு, அரையாண்டு காலங்களில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி இழக்கும் பயனாளிகள் தானியங்கி புதுப்பித்தல் முறையில் நீக்கப்படுவார்கள்.
மேலும் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |