அதிமுக தொகுதிகளில் வெள்ள நிவாரண பணிகள் நடைபெறவில்லையா? நடிகை அதிதி பாலன் சொல்வது என்ன?
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது குறித்து நடிகை அதிதி பாலன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிதி பாலன் பதிவு
மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் மழை நீரில் சூழ்ந்ததால் 3 நாள்களாக தீவு போல காட்சியளிக்கிறது. இதனால், மக்களது இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்து சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகை அதிதி பாலன் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "நான் திருவாமியூர் ராதாகிருஷ்ணன் நகர் சென்றிருந்தேன். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தண்ணீர் இந்த பகுதிக்கு பாய்ச்சப்பட்டது. அங்கே இறந்த விலங்குகள் மிதந்து கொண்டிருந்தன. 2 குழந்தைகளையும் அவர்களின் பாட்டியையும் மீட்க நாங்கள் தேங்கிய தண்ணீரில் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இதற்கிடையில், செல்வாக்கு மிக்க ஒரு பெண்ணை ஏற்றிச் செல்வதற்காக 6 காவலர்களுடன் படகு ஒன்று கோட்டூர் புரத்தில் உள்ள ரிவர் வியூ சாலையில் சென்றது" என்று குறிப்பிட்டிருந்தார்.
Govt, where are you?
— Aditi Balan (@AditiBalan) December 5, 2023
I just went to Radhakrishnan nagar, Thiruvamiyur . Water from surrounding areas have been pumped into this area. There were dead animals floating around. pic.twitter.com/hy2C3eWYBQ
இதற்கு பதிலளித்த ஒருவரின் பதிவையும் அவர் பகிர்ந்திருந்தார். அதில், "இங்கு குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்து மின்சாரம் இல்லை. குழந்தைகளை காரில் தூங்க வைத்து வீட்டை மேலே மாற்றம் செய்கிறோம்" எனக் கூறியிருந்தார்.
அதிமுக தொகுதிகள்?
மேலும் அவர், "அதிமுகவின் தொகுதிகளில் வெள்ள நிவாரண வேலைகள் எதுவும் நடைபெறவில்லை என்பது உண்மையா? அரசுக்கு பதிலாக மீனவர்கள் அவர்களை காபாற்றுகிறார்களா?
வேளச்சேரி, மேடவாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்" எனப் பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |