ஒரே ஒரு சின்ன குறைதான்., ஆனால் இது தான் உலகில் வாழ சிறந்த நகரம்
உலகில் வாழ சிறந்த நகரம் என்ற பெருமையை வியன்னா பிடித்துள்ளது.
ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னா (Vienna) உலகின் வாழ சிறந்த நகரமாக 2024-ஆம் ஆண்டிற்கான Global Liveability Index மதிப்பீட்டில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த மதிப்பீட்டை Economist Intelligence Unit (EIU) வெளியிட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டில், நகரங்களின் நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி, மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
வியன்னாவின் சிறப்பு மதிப்பீடு:
நிலைத்தன்மை - 100/100
சுகாதாரம் - 100/100
கல்வி - 100/100
உள்கட்டமைப்பு - 100/100
கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் - 93.5/100
விளையாட்டு நிகழ்வுகள் குறைவாக உள்ளதன் காரணமாக கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் மதிப்பீட்டில் 100/100 பெறத் தவறியுள்ளது.
2024-இல் வாழ சிறந்த 10 நகரங்கள் பட்டியல்
வியன்னா (ஆஸ்திரியா) - 98.4/100
கோபன்ஹேகன் (டென்மார்க்) - 98/100
சூரிக் (சுவிட்சர்லாந்து) - 97.1/100
மெல்போர்ன் (அவுஸ்திரேலியா) - 97/100
கல்கரி (கனடா) மற்றும் ஜெனீவா (சுவிட்சர்லாந்து) - 96.8/100
சிட்னி (அவுஸ்திரேலியா) மற்றும் வான்கூவர் (கனடா) - 96.6/100
ஒசாகா (ஜப்பான்) மற்றும் ஆக்லாந்து (நியூசிலாந்து) - 96/100
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Vienna, Austria's capital city Vienna, best place to live in the world, best city to live in the world 2024