வரவிருக்கும் இன்னொரு போர்., எச்சரிக்கை விடுத்த ஐ.நா. பொதுச்செயலாளர்
உலகம் மற்றொரு போரை எதிர்நோக்கவுள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஆழமடைந்து வரும் மோதல் மற்றொரு பாரிய போருக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
சில நாட்களுக்கு முன்பு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஹஜ் சமி தலேப் அப்துல்லா கொல்லப்பட்டார்.
இந்நிலையில், ஷியா ராணுவ குழுவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு ஜெருசலேமில் முழு அளவிலான போருக்குச் செல்வதாக நஸ்ரல்லா எச்சரித்துள்ள சூழலில், அதற்கு ஐ.நா பொதுச்செயலாளர் தனது அறிக்கையில் பதிலளித்தார்.
பிடிவாதமான முடிவும், தவறான மதிப்பீடும், எல்லைகளைக் கடந்து எதிர்பாராத வழிகளில் செல்லும் மற்றொரு பாரிய பேரழிவை உருவாக்கும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
லெபனானை மற்றொரு காஸாவாக பார்க்க உலகம் விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான முன்னெடுப்புகளை இரு தரப்பினரும் முன்னெடுத்துச் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவி வரும் மோதலுக்கு ராணுவ ரீதியில் தீர்வு கிடைக்காது என்று அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில், இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் பல ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன் காரணமாக 53 ஆயிரம் இஸ்ரேலியர்களும், லட்சக்கணக்கான லெபனானியர்களும் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |