உலகின் காஸ்ட்லியான விவாகரத்து - பில்கேட்ஸ் எத்தனை கோடி ஜீவனாம்சம் வழங்கினார் தெரியுமா?
பில்கேட்ஸ் தனது முன்னாள் மனைவிக்கு பெரும் தொகை ஒன்றை ஜீவனாம்சமாக வழங்கியுள்ள நிலையில், இதுவே உலகின் காஸ்ட்லியான விவாகரத்தாக கருதப்படுகிறது.
உலகின் காஸ்ட்லியான விவாகரத்து
மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ், கிட்டதட்ட 18 ஆண்டுகள் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர்.

போர்ப்ஸ் அறிக்கையின் படி, தற்போது 103.9 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன், உலகப் பணக்காரர் பட்டியலில் 18வது இடத்தில் உள்ளார்.
பில்கேட்ஸுக்கு கடந்த 1994 ஆம் ஆண்டில் மெலிந்தா பிரெஞ்ச் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் உட்பட 3 குழந்தைகள் உள்ளது.

Credit : AFP
கடந்த 2000 ஆம் ஆண்டில் இருவரும் இனைந்து கேட்ஸ் & மெலிந்தா அறக்கட்டளையை தொடங்கி தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பல மில்லியன்களை நிதி உதவியாக வழங்கி வருகின்றனர். இதுவே உலகின் மிகப்பெரிய தனியார் தொண்டு நிறுவனமாக உள்ளது.

Credit : wikipedia
கடந்த 2019 ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்து, 2021 ஆம் ஆண்டில் முறைப்படி விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்து சட்டப்படி மெலிந்தாவிற்கு 12.5 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.1,12,800 கோடி) ஜீவனாம்சம் வழங்க ஒப்புக்கொண்டார்.
அதன்படி, ஏற்கனவே 4.6 பில்லியன் டொலர்( இந்திய மதிப்பில் ரூ.41,000 கோடி) ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.
தற்போது மீதமுள்ள 7.88 பில்லியன் டொலரையும்(இந்திய மதிப்பில் ரூ.71,100 கோடி) வழங்கியுள்ளார்.
இதுவே உலகின் மிக காஸ்ட்லியான விவாகரத்து என அழைக்கப்படுகிறது.

பில்கேட்ஸை பிரிவதற்கு அவருக்கு ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் இருந்த தொடர்பு முக்கிய காரணம் என அவரது முன்னாள் மனைவி மெலிந்தா தெரிவித்தார். சமீபத்தில், எப்ஸ்டீன் உடன் பில்கேட்ஸ் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |