Expensive Soap: தங்கம், வைரத்தால் சோப்- விலை 2 லட்சமாம்
தினந்தோறும் நாம் பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்று சோப். குறைந்தது 50 ரூபாயிலிருந்து 150 வரை விலைகளை கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் ஒரு சோப்பின் விலை லட்சங்களில் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
ஆம் தங்கம் மற்றும் வைரத்தால் ஆன சோப்பின் விலை மட்டும் 2 லட்ச ரூபாயாம்.
விலையுயர்ந்த சோப்
லெபனானின் Tripoli நகரில் தயாரிக்கப்படும் குறித்த சோப்பின் விலை 2800 டொலராகும் அதாவது 232,400 ரூபாயாகும்.
Bader Hassen & Sons நிறுவனத்தால் இயற்கையான நறுமண பொருட்களை கொண்டு சோப் தயாராகிறது என கூறப்படுகிறது.
Khan Al Saboun என்ற பெயரில் அழைக்கப்படும் சோப்பை, ஐக்கிய அரபு எமீரகத்தின் முக்கியமான தலைவர்கள் மற்றும் நெருங்கிய விருந்தினர்களுக்கு மட்டுமே வழங்குகிறார்கள்.
முதன்முறையாக 2013ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, கத்தாரின் முதல் பெண்மணிக்கு பரிசாக வழங்கப்பட்டதாம்.
எப்படி தயாராகிறது?
தங்க மற்றும் வைர பொடிகளை கொண்டு உருவாக்கப்படும் சோப் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காது என்றும், ஆன்மிக சக்தியை அதிகரிக்கும் எனவும் பிபிசி-க்கு அளித்த பேட்டியில் CEO ஆமிர் ஹாசன் தெளிவுபடுத்தினார்.
17 கிராம் 24 கரட் தங்கம், சில கிராம்களில் வைர பவுடர், சுத்தமான ஆலிவ் ஆயில், இயற்கையான தேன், பேரிச்சம் பழம் மற்றும் aged oud ஆல் தயாராகிறது, குறைந்தது ஆறு மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.