ஒருநாள் இரவு மட்டும் தங்க ரூ.83 லட்சம் கட்டணம்.., உலகின் விலையுயர்ந்த ஹொட்டல்
உலகிலேயே விலையுயர்ந்த ஹொட்டலின் வீடியோவானது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஓட்டலில் ஒரு நாள் இரவு மட்டும் தங்குவதற்கு கட்டணமாக ரூ.83 லட்சம் வசூலிக்கப்படுகிறது.
அட்லாண்டிஸ் தி ராயல் (Royal Atlantis)
துபாயில் உள்ள அட்லாண்டிஸ் தி ராயல் சொகுசு ஹொட்டலை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த ஹொட்டலில் 4 படுக்கை அறைகள், 4 பாத்ரூம் மற்றும் 12 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் உள்ள டைனிங் டேபிள், நீச்சல் குளம் மற்றும் மொட்டை மாடி ஆகியவை உள்ளன.
இதனை தவிர்த்து இன்டூர் மற்றும் வெளிப்புறத்தில் பல வசதிகள் உள்ளன. குறிப்பாக மையல் அறைகள், படம் பார்ப்பதற்கு தியேட்டர், அலுவலகம், நூலகம், பார் வசதி, விளையாட்டு அறைகள் ஆகியவை ஹொட்டலில் நமக்கு வழங்கப்படும்.
ரூ.83 லட்சம் கட்டணம்
இந்த அட்லான்டிஸ் தி ராயல் ஹொட்டலில் பல வித அறைகள் இருப்பினும், காஸ்ட்லியான அறை ஒன்று உள்ளது. இந்த அறையின் பெயரானது அல்ட்ரா லக்சரி ஆகும். இங்கு ஒரு நாள் மட்டும் தங்குவதற்கு ரூ.83 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரியில் தான் இந்த சொகுசு ஹொட்டல் திறக்கப்பட்டது சேவைக்கு வந்துள்ளது. அப்போது, சர்வதேச அளவில் பிரபலமான பாடகர் பியோனஸின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த காஸ்ட்லியான ஹொட்டல் குறித்த வீடியோவை பிரபல நடிகை அனன்யா பாண்டேவின் உறவினர் அலன்னா பாண்டே சமுக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |