உலகின் முதல் கண் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி! அறிவியலின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்
அமெரிக்க ராணுவ வீரர் ஒருவருக்கு கண் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது, அறிவியல் முன்னேற்றத்தின் புதிய எதிர்காலத்தை ஊக்குவிக்க அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண் அகற்றம்
கடந்த 2021ஆம் ஆண்டு ஆரோன் ஜேம்ஸ் (46) என்ற ராணுவ வீரர், உயர் மின்னழுத்த வயரிங்கை தொட்டதில் தாக்குதலுக்கு உள்ளனார்.
7,200 வோல்ட் மின்சாரம் பாய்ந்ததால் அவரது இடது கை, மூக்கு, உதடுகள், முன்பற்கள், இடது கன்னம், கன்னம் ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினாலும், அவரது கண்ணை அகற்ற வேண்டிய சூழல் உருவானது.
@NYU Langone
இந்த நிலையில் ஜேம்ஸிற்கு மருத்துவர்கள் கண் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இதன்மூலம் உலகின் முதல் கண் மாற்று அறுவை சிகிச்சையை பெற்ற நபராக அவர் மாறினார்.
சிக்கலுக்கு தீர்வு
அத்துடன் அறிவியலின் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக மருத்துவ உலகில் இது பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கண் மாற்று அறுவை சிகிச்சையில் இருந்த சிக்கலை மருத்துவர்கள் இம்முறை சரி செய்துள்ளனர்.
அதாவது, கண்ணை மூளையுடன் இணைக்கும் நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களின் சிக்கலான வலையமைப்புக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 140 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, 21 மணிநேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
@NYU Langone
இரண்டு அறுவை சிகிச்சை அறைகளில் இது நடந்துள்ளது. ஒரு குழு ஜேம்ஸுடன் அறையில் இருந்தது, மாற்றப்பட வேண்டிய முகத்தின் பகுதிகளை அகற்றியது. மற்றொரு குழுவினர் நன்கொடையாளரின் முகம் மற்றும் கண் பார்வையை பிரித்தனர்.
மறுவாழ்வு
அதன் பின்னர் நன்கொடையாளரின் எலும்பு மஜ்ஜையில் காணப்படும் வயது வந்த ஸ்டெம் செல்களுடன் நன்கொடையாளரின் கண்ணை இணைப்பதன் மூலம் குழு இதைச் செய்தது.
இதன்மூலம், மூளைக்கு காட்சித் தகவலை அனுப்பும் மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியான பார்வை நரம்புடன் கண்ணை இணைப்பது மற்றும் நரம்புகள் காலப்போக்கில் மீண்டும் உருவாக்க உதவுவது என்ற சவால் தீர்க்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் 17 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் கழித்தார். பின்னர் அவர் வெளியேற்றப்பட்டு வெளிநோயாளர் மறுவாழ்வுக்கு அனுப்பப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |