உலகின் முதல் சமூக ஊடகத்தடை அமுல்! 1.5 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் அழிப்பு
அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான உலகத்தின் முதல் சமூக ஊடகத் தடை அமுலுக்கு வந்துள்ளது.
தடை
பதின்ம வயதினரை பாதுகாக்கும் வகையில், 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டிற்கு அவுஸ்திரேலிய அரசு தடை விதிப்பதாக அறிவித்திருந்தது. 
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ், டிக் டோக், ஸ்னாப்சேட், ட்விட்ச், கிக், எக்ஸ், யூடியூப் மற்றும் ரெட்டிட் ஆகிய சமூக ஊடகங்கள் இதில் அடங்கும்.
தற்போது இந்த தடை அவுஸ்திரேலியாவில் அமுலுக்கு வந்துள்ளது. இது உலகின் முதல் சமூக ஊடகத் தடை (16 வயதிற்குட்பட்டவர்களுக்கு) ஆகும். 
அந்தோணி அல்பானீஸ்
இதன்மூலம் லட்சக்கணக்கான அவுஸ்திரேலிய குழந்தைகள் தங்கள் கணக்குகளில் இருந்து நீக்கப்பட்டு, புதிய கணக்குகளை உருவாக்குவதில் இருந்து தடுக்கப்படுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமை இந்த தடை குறித்து பேசிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், "இது நமது நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய சமூக மற்றும் கலாச்சார மாற்றங்களில் ஒன்றாக இருக்கும்.
இது வரும் ஆண்டுகளில் தேசிய பெருமைக்கு ஆதாரமாக இருக்கும். இது அவுஸ்திரேலியாவின் உலகளவில் முன்னணி நடவடிக்கையாகும். மேலும், இது அவுஸ்திரேலிய பெற்றோரால் பெருமளவில் இயக்கப்படும் மாற்றமாகும்" என தெரிவித்தார். 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |