Omicron துணை வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆறுதலளிக்கும் செய்தி
The 'stealth' Omicron வைரஸ் என்றும், Omicron துணை வைரஸ் என்றும் அழைக்கப்படும் BA.2 வகை கொரோனா வைரஸ் குறித்து, ஆறுதலளிக்கும் செய்தி ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது, BA.2 வகை கொரோனா வைரஸும், அதன் முந்தைய மரபணு மாற்ற வைரஸான BA.1 Omicron வைரஸைப் போலவே மிதமானதுதான் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த BA.2 வகை Omicron வைரஸ் முதலில் டென்மார்க் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், வாஷிங்க்டன் பல்கலை உயிரித்தகவலியல் நிபுணரான Dr Pavitra Roychoudhury என்பவர், கொள்ளைநோயின்போது இதுபோல் துணை வைரஸ்கள் உருவாகுவது சாதாரணமான ஒன்றுதான் என்றும், அதற்கு 'stealth' அதாவது இரகசிய வைரஸ் என பெயர் வைத்தது சாதாரண நபர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும் என்றும், ஆகவே, முந்தைய வைரஸ்களைக் காட்டிலும் BA.2 எவ்வித கூடுதல் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தக்கூடியதல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், BA.1 வைரஸால் உருவான நோயெதிர்ப்பு சக்தியை எதிர்த்து BA.2 வைரஸ் தொற்று தாக்கும் என அஞ்சுவதற்கான காரணங்களும் இல்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.