இது கப்பலா.. சொர்க்கமா.. 20 மாடிகள், 40 ஹொட்டல்கள், 7 நீச்சல் குளங்கள்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?
20 மாடிகள், 55 அடி உயர நீர்வீழ்ச்சி, 40 உணவகங்கள், 7 நீச்சல் குளங்கள், 6 வாட்டர் ஸ்லைடுகள் இருக்கும் உலகின் மிகப்பெரிய கப்பலான Icon of the Seas தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
Icon of the Seas
1,200 அடி நீளம் கொண்ட Icon of the Seas பெயர் கொண்ட கப்பலின் மொத்த எடை 2.5 லட்சம் டன்.இதில் மொத்தம் 7600 பேர் பயணிக்க முடியும். அதில் 2,350 பேர் மட்டுமே ஊழியர்கள். இதில் 3 மாடிகள் கொண்ட டவுன் ஹவுஸ் மற்றும் 28 அறைகள் உள்ளன.
Royal Caribbean
அதுமட்டுமல்லாமல், ஷாப்பிங் செய்வதற்கு சென்ட்ரல் பார்க், பியர்ல் எனப்படும் மூன்று மாடிகள் கண்ணை கவரும் வகையில் உள்ளது. இந்த கப்பலின் மேற்பகுதியில் Thrill Island எனப்படும் Water Park உள்ளது.
Icon of the Seas really pops at night. Surfside neighborhood below and Thrill Island above. #IconoftheSeas pic.twitter.com/XAueLOu71h
— Cruise Fever (@CruiseFever) January 25, 2024
இந்த Icon of the Seas கப்பலை Royal Caribbean நிறுவனம் தயாரித்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் மிக பிரம்மாண்டமான கப்பல் என்று Royal Caribbean தலைவர் Jason Liberty கூறியுள்ளார்.
இதில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தான் இதற்கு சிக்கலை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. அதாவது கப்பலை இயக்க பயன்படுத்தப்படும் LNG மீத்தேன் எனப்படும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு சுற்றுச்சூழலுக்கு தீங்கி விளைவிக்கக் கூடியது.
Icon of the Seas கப்பலின் முதல் பயணம் அமெரிக்காவின் MIAMI நகரில் தொடங்கியுள்ளது. மிதக்கும் சொர்க்கம் என்று அழைக்கப்படும் இந்த கப்பலின் மதிப்பு 2 பில்லியன் டொலர் என்று கூறப்படுகிறது.
The "Icon of the Seas" is the largest cruise ship ever built. ? pic.twitter.com/7Kpdd0gOU1
— BEYAZ (@DAcemoglumt) January 26, 2024
இந்த கப்பலில் பயணிக்க 2026 -ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 நாட்கள் பயணத்திற்கு 1,800 டொலர் முதல் 2,200 டொலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 1,50,000 ரூபாய் முதல் 1,83,000 ரூபாய் ஆகும். இந்த கப்பலின் ஐகானாக கால்பந்து வீரர் Lionel Messi அறிவிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |