உலகின் இரகசிய அரசிற்காக தலைவர்கள் கூட்டம்: பரபரப்பு குற்றச்சாட்டு
உலகப் பெரும்புள்ளிகள் உலகின் இரகசிய அரசாங்கத்திற்காக வாஷிங்டனில் ஒன்று கூடியது குறித்த விவாதம் கிளம்பியுள்ளது.
72வது ஆண்டாக
அமெரிக்காவின் வாஷிங்டனில், கடந்த 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நடந்த கூட்டம் ஒன்றில் உலகப் பெரும்புள்ளிகள், தலைவர்கள் மற்றும் கோடீஸ்வரர்கள் ஒன்று கூடினர்.
அங்கு செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம், நவீனப் போர்முறை மற்றும் க்ரிப்டோகரன்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.
தற்போது 72வது ஆண்டாக நடைபெற்ற இந்நிகழ்வின் நோக்கமானது, மேற்கத்தியத் தலைவர்கள் புதுமையான யோசனைகளை பகிர்ந்துகொள்ள அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.
விமர்சகர்கள் குற்றச்சாட்டு
மிகவும் இரகசியமான வருடாந்திர பில்டர்பெர்க் என்றழைக்கப்படும் இந்தக் கூட்டத்திற்கு ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை மற்றும் கூட்டக் குறிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனை ஒரு இரகசிய அரசாங்கத்தை அல்லது ஒரு மர்மமான புதிய உலக ஒழுங்கை உருவாக்குவதற்கான அடிப்படையாக இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில் விவாதத்திற்காக பட்டியலிடப்பட்ட மற்ற தலைப்புகளில் மேற்குலகம், சீனா, அமெரிக்கா, உக்ரைன், ரஷ்யா, மத்திய கிழக்கு, உலகளாவிய வர்த்தகம், ஐரோப்பா, எரிசக்தி பல்வகைப்படுத்தல் மற்றும் ஆர்க்டிக் பாதுகாப்பு ஆகியவை அடங்கும் என தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |