உலகிலேயே மனிதர்கள் உருவாக்கிய விலையுயர்ந்த பொருள்! அது என்ன?
விண்வெளியில் 12 லட்சம் கோடி செலவில் மனிதர்கள் உருவாக்கிய பொருள் ஒன்று, உலகின் விலையுயர்ந்த பொருள் எனும் சாதனையை செய்துள்ளது.
150 பில்லியன்
சர்வதேச விண்வெளி நிலையம் என்பது அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய 5 சக்திவாய்ந்த நாடுகளின் விண்வெளி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டு திட்டமாகும்.
இதனை உருவாக்க 150 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் ஆனதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் இந்த சர்வதேச விண்வெளி நிலையம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மிக விலையுயர்ந்த பொருள் எனும் பட்டத்தைப் பெற்றுள்ளது. இதற்காக இது கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது.
உலகளாவிய திட்டம்
இந்த நிலையமானது, பூமியைச் சுற்றி சராசரியாக 400 கிலோமீற்றர் உயரத்தில் சுற்றி வருகிறது. இது பல்வேறு அறிவியில் சோதனைகளுக்கான ஆய்வகமாக செயல்படுகிறது.
குறிப்பாக அறிவியல், பூமி கண்காணிப்பு மற்றும் விண்வெளியில் மனித ஆரோக்கியம் போன்ற துறைகளில் முக்கியமான ஆய்வுகளை மேற்கொள்கிறது.
இதில் ஆய்வகங்கள், தங்கும் அறைகள் மற்றும் சோலார் பேனல்கள் ஆகியவை உள்ளன. மேலும் காற்று, நீர் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் உயிர் ஆதரவு அமைப்புகளுடன் இந்த சர்வதேச விண்வெளி நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1980களில் நாசாவின் Freedom விண்வெளி நிலையமாக முதலில் இது கருதப்பட்டது. ஆனால் தனிநாடாக இவ்வளவு பெரிய முயற்சியை நிர்வகிக்க முடியாது என்பதால் இது உலகளாவிய திட்டமாக மாறியது. பின்னர் 1998யில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |