'தாலிபான்களை நாம தான் வழிநடத்த வேண்டும்' உலக நாடுகளுக்கு சீனா வலியுறுத்தல்
தாலிபான்களுடன் அனைத்து நாடுகளும் தொடா்பு கொண்டு, அவா்களை வழிநடத்த வேண்டும் என்று அமெரிக்காவிடம் சீனா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சீன அரசுச் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்க வெளியுறவுத் துறை ஆன்டனி பிளிங்கனை சீன வெளியுறவுத் துறை அமைச்சா் வாங் யீ (Wang Yi) தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆப்கன் விவகாரம் குறித்து பேசினாா்.
அப்போது, அனைத்துத் தரப்பினரும் தலிபான்களோடு தொடா்பு கொண்டு பேச வேண்டும் எனவும் தாலிபான்களை அனைவரும் வழிநடத்த வேண்டும் எனவும் வாங் யீ வலியுறுத்தினாா்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது, அந்த நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என்ற தனது அச்சத்தை பிளிங்கனிடம் வாங் யீ மீண்டும் வெளிப்படுத்தினாா்.
இதுதவிர, இருதரப்பு உறவு குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசனை நடத்தினா் என்று ஜின்ஹுவா (Xinhua News Agency) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.