உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்: பட்டத்தை பெறும் பிரித்தானிய பெண்
பிரேசிலைச் சேர்ந்த உலகின் மிக வயதான பெண்மணியான இனா கனபரோ லுகாஸ், தனது 116வது வயதில் காலமானார்.
கன்னியாஸ்திரி
பிரேசில் நாட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரியான இனா கனபரோ லூகாஸ், தனது வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகளில் உயிர்வாழ்வதில் சிரமப்பட்டார்.
இருப்பினும், 1908ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 26வது வயதில் கன்னியாஸ்திரியாக வேண்டும் என உறுதிபூண்டார்.
அதைபோலவே கன்னியாஸ்திரியான இனா கனபரோ லூகாஸ், தனது வாழ்க்கையை பக்தி மற்றும் சேவைக்கு அர்ப்பணித்ததாக தெரிவித்தார்.
116வது வயதில்
இந்த நிலையில், உலகின் மிக வயதான இனா கனபரோ லூகாஸ் தனது 116வது வயதில் உயிரிழந்துள்ளார்.
ஒருமுறை தனது நீண்ட ஆயுளுக்கு காரணம் கடவுளின் ஆசீர்வாதம்தான் என்று லூகாஸ் கூறியிருந்தார்.
இவர் தனது 110வது பிறந்தநாளில், மறைந்த போப் பிரான்சிஸிற்கு ஆசி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனா கனபரோ லூகாஸின் மறைவால், பிரித்தானியாவைச் சேர்ந்த Ethel Caterham தற்போது உலகின் மிக வயதான பெண்மணியாகியுள்ளார். இவரது வயது 115 ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |