33,000 அடியில் இருந்து பாராசூட் இல்லாமல் விழுந்த விமான பணிப்பெண்: 1972-ல் நடந்தது என்ன?
33,000 அடி உயரத்தில் பாராசூட் இல்லாமல் விழுந்து உயிர் பிழைத்த வெஸ்னா வுலோவிச்சின் கதை இன்றும் அனைவருக்கும் ஆச்சரியத்தை எற்படுத்தி வருகிறது.
வரலாற்று தருணம்
வேஸ்னா வுலோவிச்சின்(Vesna Vulovic) பெயர் விமான போக்குவரத்து வரலாற்றில் வேறு எவருக்கும் இல்லாத ஒரு காரணத்திற்காக பதிவாகியுள்ளது.
ஜனவரி 26, 1972 ஆம் ஆண்டில் நடந்த பேரழிவான விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் வேஸ்னா வுலோவிச். அவர் பாராசூட் இல்லாமல் 33,000 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிர் பிழைத்துள்ளார், இது இன்றும் உலக சாதனையாக உள்ளது.
விமானத்தில் வெடிகுண்டு
JAT Yugoslav ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் 23 வயதான விமான பணிப்பெண்ணாக இருந்த வுலோவிச், (Flight 367) விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, விமானம் செக்கோஸ்லோவாக்கியா (தற்போதைய செக் குடியரசு) வான்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தபோது, வெடிபொருள் ஒன்று வெடித்து விமானத்தை துண்டுகளாக்கியது.
விமானத்தில் இருந்த மற்ற 27 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக இடிபாடுகளுக்கு இடையில், வுலோவிச் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னாள் மருத்துவ உதவியாளரான கிராம பெண் புருனோ ஹோன்கே அவரை கண்டுபிடித்து, மீட்புக்குழுக்கள் வரும் வரை அவருக்கு அவசர உதவி அளித்துள்ளார்.
பாராசூட் இல்லாமல் கீழே விழுந்ததில் பணிப்பெண்ணான வெஸ்னா வுலோவிச்சுக்கு மண்டை ஓடு, முதுகு தண்டுவடம் என பல பகுதிகளில் உடல் முறிவுகள் போன்ற கடுமையான காயங்களை ஏற்பட்டன.
நீண்ட மறுசீரமைப்பு சிகிச்சைக்கு பிறகு தற்போது உயிருடன் முழுவதுமாக மீட்கப்பட்டார்.
மர்மத்தின் பின்னணி
இந்த விபத்தில் குண்டுவெடிப்புக்கு காரணமாக குரோஷிய தேசியவாதிகளால் வைக்கப்பட்ட குண்டு எனக் கருதப்பட்டது, ஆனால் இந்த வழக்கு இன்னும் தீர்க்கப்படவில்லை.
உடல் மற்றும் மன ரீதியான காயங்கள் இருந்தபோதிலும், வுலோவிச் பின்னர் ஜே.ஏ.டி ஏர்வேஸ் நிறுவனத்தில் டெஸ்க் வேலையில் மீண்டும் பணிக்கு திரும்பினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |