உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலில் உடைந்து விழுந்த நீர் குழாய்: பதறி கூச்சலிட்ட பயணிகள்
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலில் உள்ள நீர்ச் சறுக்கு விளையாட்டில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சொகுசு கப்பலில் விபத்து
ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமான ஐகான் ஆஃப் தி சீஸ் என்ற உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலில் உள்ள நீர்ச் சறுக்கு விளையாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
நீர்ச்சறுக்கு விளையாட்டின் ஒரு பாகம் உடைந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
🚨 “STOP THE SLIDE!” - “OH MY GOD SOMEBODY JUST FELL OUT OF THE SLIDE!”
— HustleBitch (@HustleBitch_) August 8, 2025
Chaos on the world’s largest cruise ship after a waterslide panel shatters mid-ride. One passenger reportedly sliced open, triggering an emergency shutdown.
What’s going on with cruise ships this year? pic.twitter.com/rnRxXADdvT
இந்த விபத்தின் போது நீர்ச்சறுக்கு குழாயில் தண்ணீர் கசிவதை அங்கிருந்த பயணிகள் பார்த்து கூச்சலிட்டுள்ளனர், இதையடுத்து உடனடியாக நீர்ச்சறுக்கு விளையாட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவருக்கு முதலுதவிகள் உடனடியாக வழங்கப்பட்டு அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக ராயல் கரீபியன் கப்பல் குழு தெரிவித்துள்ளது.
மேலும் நீர்ச்சறுக்கு விளையாட்டின் கண்ணாடி குழாய் உடைந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், விசாரித்து வருவதாகவும் கப்பல் குழு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |