உலகின் பிரமாண்ட சொகுசு ஜெட் விமானம்: படுக்கையறைகள் முதல் குளியலறை வரையிலான ஆடம்பரம்: புகைப்படம்
“பறக்கும் மாளிகை” என பெயர் பெற்ற உலகின் மிகப்பெரிய தனியார் ஜெட் விமானம் குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
உலகின் மிகப்பெரிய தனியார் சொகுசு விமானம்
பறக்கும் மாளிகை என புகழ்பெற்ற உலகின் மிகப்பெரிய தனியார் விமானமான போயிங் 747-8 ஆடம்பரமான பயணத்திற்கு தேவையான அனைத்தும் கொண்டுள்ளது.
இந்த விமானத்தில் ஆடம்பரமான மற்றும் விசாலமான மாஸ்டர் சூட் படுக்கை அறைகள் உட்பட ஏராளமான படுக்கையறைகள், சாப்பாட்டு அறைகள், லிவிங் அறைகள், உள்ளன.
Image: Alberto Pinto
சிறப்பான உறக்கத்திற்கு தேவையான அனைத்து ஆடம்பர வசதிகளுடன் சொகுசு கட்டில் மெத்தை உடன் படுக்கையறை அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க கண்ணாடிகளால் சூழ்ந்த குளியலறை தங்க வார்ப்பில் செம்மைப்படுத்த பட்டுள்ளது.
படுக்கையறையில் இருந்து செல்லும் தங்கப் படிக்கட்டுகள் முதன்மை லிவிங் அறைக்கு நம்மை அழைத்து செல்கிறது. இங்கு புத்தகங்கள் அடுக்கப்பட்ட வண்ண அலமாரிகள், கலைப் படைப்புகள், சொகுசு நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன.
Image: Alberto Pinto
மேலும் தனித்த லிவிங் அறையில் மதுபான பிரிவு, விளையாட்டு பிரிவு போன்றவை வைக்கப்பட்டுள்ளது.
வண்ண ஒளிகளால் நிரம்பி காணப்படும் இந்த விமானத்தில் விருப்பத்திற்கு ஏற்றவாறு வண்ண ஒளிகள் மாற்றிக் கொள்ள முடியும்.
விமானத்தின் மதிப்பு
இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 467 பயணிகள் பயணம் செய்ய முடியும், 224 அடி இறக்கைகளுடன் இந்த போயிங் 747-8 விமானம் 2005ம் ஆண்டு தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.
Image: Alberto Pinto
இந்த மிகப்பெரிய சொகுசு ஜெட் விமானம் ரியல் எஸ்டேட் அதிபரான ஜோசப் லாவுக்கு சொந்தமானது, அத்துடன் இதன் நிகர மதிப்பு சுமார் £10.3 பில்லியனுக்கும் அதிகம் என simpleflying.com தெரிவித்துள்ளது.
Image: Alberto Pinto
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |