பனியால் மூடிய உலகின் வறண்ட பாலைவனம்! வைரலாகும் வீடியோ
உலகின் மிக வறண்ட பாலைவனமான அட்டகாமா பாலைவனம்(Atacama Desert), தற்போது பனியால் போர்த்தப்பட்டுள்ளது என்று அண்மைய ஆய்வு ஒன்று வியப்பூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தியை ALMA ஆய்வகம் தனது X (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் ஒரு காணொளியுடன் பகிர்ந்துள்ளது.
இந்த ஆய்வகம் வடக்கு சிலியில் கடல் மட்டத்திலிருந்து 2,900 மீட்டர் (9,500 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
❄️#Snow fell in the world's driest desert, the #Atacama.
— News.Az (@news_az) June 27, 2025
The desert in northern #Chile has been home to cutting-edge telescopes for decades. The #ALMA observatory in the Atacama reported that its main facility had not seen snow for 10 years.
Raul Cordero, a climate scientist at… pic.twitter.com/QiTRnqJCUp
பல தசாப்தங்களாக, இந்த பாலைவனம் அதன் தெளிவான வானம் காரணமாக அதிநவீன தொலைநோக்கிகளுக்கு உகந்த இடமாக இருந்து வருகிறது.
பத்தாண்டுகளாக பனிப்பொழிவு இல்லை
அட்டகாமா பாலைவனத்தில் உள்ள ALMA ஆய்வகத்தின் முக்கியப் பிரிவு, கடந்த 10 ஆண்டுகளாக அங்கு பனிப்பொழிவு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
சான்டியாகோ பல்கலைக்கழகத்தின் காலநிலை விஞ்ஞானி ரவுல் கோர்டெரோ, இந்த பனிப்பொழிவை காலநிலை மாற்றத்துடன் திட்டவட்டமாக இணைப்பது அவ்வளவு எளிதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இதுபோன்ற அசாதாரண நிகழ்வுகள் எதிர்காலத்தில் அடிக்கடி நிகழலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |