உலகிலேயே ஏலியனுக்காக கட்டப்பட்ட ஒரே ஒரு கோவில் தமிழகத்தில் தான் உள்ளது: எங்கு தெரியுமா?
இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்களும், வழிபாட்டுத்தலங்களும் உள்ளதால் இந்தியா ஆன்மீக பூமி என்று அழைக்கப்படுகிறது.
இந்து மதத்தில் ஆயிரக்கணக்கான கடவுள்களும், அவர்களுக்கென அதிகமாகக் கோவில்களும் உள்ளன.
இதில் சில தனித்துவமான கோவில்கள் உள்ளது, அங்கு வித்தியாசமான பிரசாதங்களும் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், உலகிலேயே ஏலியனுக்காக கட்டப்பட்டுள்ள ஏலியன் கோவில் தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பதும் பலருக்கும் தெரியாது.
அதன்படி, சேலத்தின் மல்லமுப்பம்பட்டி பகுதியில் சித்தர்பாகியா என்பவரால் இந்தக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தரைக்குக் கீழே 11 அடி ஆழத்தில் உள்ள ஒரு பாதாள அறையில் ஒரு தனித்துவமான ஏலியன் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இதன் அமைப்பு ஒரு வழக்கமான கோயிலைப் போல இல்லாதது, இந்த கோவிலைப் பற்றிய ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இதுபற்றி சித்தர்பாகியா கூறுகையில், வேற்றுக்கிரக உயிரினத்திடமிருந்து அனுமதி பெற்ற பின்னரே சிலை நிலவறையில் வைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
மேலும், வேற்றுக்கிரகவாசிகள் இந்த உலகத்திற்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். அவர்கள் நன்மை செய்வதற்காகவே நம்மைத் தேடி வருகிறார்கள்.
அதனால்தான் நான் இந்தக் ஏலியன் கோயிலைக் கட்டியுள்ளேன் என்று அவர் கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |