300 முதல் 500 ஆண்டுகள் பழமை! உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு
பசிபிக் பெருங்கடலின் ஆழத்தில் உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதைந்திருந்த ரகசியம்
தென்கிழக்கு பசிபிக் பெருங்கடலின் அழகிய சாலமன் தீவுக்கூட்டத்தில், உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
திரி சிஸ்டர் தீவுக்கூட்டம் அருகே கடலின் ஆழத்தில் அமைந்துள்ள இந்த பவளப்பாறை, தன் அளவிலும் வயதிலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரமிக்க வைக்கும் அளவு
34 மீட்டர் அகலம், 32 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த பவளப்பாறை, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பவளப்பாறைகளை விட மூன்று மடங்கு பெரியது.
மேலும், இது 300 முதல் 500 ஆண்டுகள் பழமையானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலின் அடியில் இவ்வளவு காலம் மறைந்திருந்த இந்த இயற்கை அதிசயம், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |