4700 ஆண்டுகளுக்கு முந்தைய பீங்கான் ஜாடிகள்: உலகின் பழமையான கப்பல் சிதைவு கண்டுபிடிப்பு
World's oldest shipwreck found in Turkey: உலகின் மிகப் பழமையான கப்பல் சிதைவு துருக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழமையான கப்பல் சிதைவு
துருக்கி நாட்டின் கெகோவா(Kekova) தீவுக்கு அருகே உலகின் மிகவும் பழமையான கப்பல் சிதைவுகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கப்பல் சிதைவு சுமார் 4,400 முதல் 4,700 ஆண்டுகள் வரை பழமையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கப்பலின் மரக்கட்டைகள் அழிந்துவிட்ட நிலையிலும், அதிலிருந்த பழங்கால பானை வடிவ பீங்கான் ஜாடிகளை(Amphorae) பத்திரமாக மீட்டுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த பீங்கான் ஜாடிகள் அக்காலத்தின் கடல்வழி வர்த்தகம் குறித்த அரிய தகவல்களை திரட்ட பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த பீங்கான் ஜாடிகள், ஆலிவ் எண்ணெய் அல்லது திராட்சை ரசத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஜாடிகளின் களிமண்களை ஆராய்ச்சி செய்ததில் இவை ஜோர்டான் பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் லெவண்டைன் கடற்கரையின் ஏதேனும் ஒரு துறைமுகத்தில் இருந்து கிளம்பிய கப்பல் டிராய் அல்லது கிரீட் தீவை நோக்கி சென்று கொண்டிருந்த போது மூழ்கி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கின்றனர்.