உலகின் மிகவும் வயதான பெண் 128 வயதில் மரணம்!
தென் ஆப்பிரிக்காவில் உலகின் மிகவும் வயதான பெண்ணொருவர் தனது 128வது வயதில் மரணமடைந்துள்ளார்.
ஜோஹன்னா மசிபுகோ
ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் வசித்து வந்தவர் ஜோஹன்னா மசிபுகோ. 1894ஆம் ஆண்டு பிறந்த இவர் தான் உலகின் மிகவும் வயதான ஆவார்.
128 வயதான மசிபுகோ தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பக்கவாதத்தினால் மசிபுகோ உயிரிழந்திருக்கலாம் என அவரது பராமரிப்பாளரும், மருமகளுமான தந்தீவி வெசின்யானா தெரிவித்துள்ளார்.
@Newsflash
முன்னதாக தனது 128வது பிறந்தநாளில் மசிபுகோ பேசியபோது, 'இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நான் ஏன் இன்னும் இங்கே இருக்கிறேன்? என்னைச் சுற்றியிருந்தவர்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள். நான் எப்போது இறப்பேன்? உயிரோடு இருந்து என்ன பயன்? நான் ஒன்றும் செய்யாமல் இங்கு அமர்ந்திருப்பதால் உலகம் என்னை சோர்வடையச் செய்தது' என கூறினார்.
Twitter
50 பேரப் பிள்ளைகள்
மசிபுகோவுக்கு பிறந்த பிள்ளைகள் ஏழு ஆவர். அவர்களில் இருவர் தான் உயிருடன் உள்ளனர். மேலும் 50 பேரப் பிள்ளைகள் மற்றும் சில கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.
ஜோஹன்னா மசிபுகோ வரும் சனிக்கிழமை அன்று ஜோபர்டனில் அடக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.