உலகிலேயே 500 பேர் மட்டுமே வைத்திருக்கும் அரிய பாஸ்போர்ட்
உலகிலேயே வெறும் 500 பேரிடம் மட்டுமே இருக்கும் அரிய பாஸ்போர்ட் பற்றி உங்களுக்கு தெரியுமா!
பொதுவாக ஜப்பான், சிங்கப்பூர் கடவுச்சீட்டுகள் (Passport) பல நாடுகளில் விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கின்றன. அவை மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களாக கருதப்படுகின்றன.
ஆனால், உலகிலேயே மிகவும் அரிதான பாஸ்போர்ட் ஒன்றை மால்டாவின் Sovereign Military Order of Malta வழங்குகிறது.
உலகம் முழுவது இதை வெறும் 500 பேர் மட்டுமே வைத்திருக்கின்றனர்.
இது ஒரு கத்தோலிக்க அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பயண ஆவணம்.
1113-ஆம் ஆண்டு Pope Paschal இதன் இறையாண்மை தன்மையை அங்கீகரித்தார். இந்த பாஸ்போர்ட் 910 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
Sovereign Council உறுப்பினர்கள், தூதரக உறுப்பினர்கள், அவர்களின் துணைவியர் மற்றும் மைனர் குழைந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
சில விசேட பணிகளை மேற்கொள்ளும் மூத்த உறுப்பினர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த ஆணையம் 120 நாடுகளில் மருத்துவ, சமூக மற்றும் மனிதாபிமான சேவைகளை வழங்குகிறது.
இந்த பாஸ்போர்ட் 4 ஆண்டுகள் செல்லுபடியாகும். உரிமையாளரின் பணிக்காலம் முடிவடையும்போது பாஸ்ப்போர்ட்டும் முடிவடையும்.
ஷெங்கன் (Schengen) பகுதிகளில் 12 நாடுகள் மட்டுமே இதை அங்கீகரிக்கின்றன. அதேபோல், அமெரிக்கா, பிரித்தானியா, நியூசிலாந்து போன்ற நாடுகளும் இதை ஏற்கவில்லை.
இந்த பாஸ்போர்ட் ஒரு அடையாளம் மட்டுமல்ல, ஒரு வரலாற்று மத மற்றும் அரசியல் முக்கியத்துவம் கொண்ட ஆவணமாகும். உலகில் சிலருக்கு மட்டுமே கிடைக்கும் இந்த பாஸ்போர்ட் அதன் அரிதான தன்மை மற்றும் வரம்புகளால் தனித்துவம் பெறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Sovereign Military Order of Malta passport, Rarest passport in the world, Knights of Malta travel document, Exclusive diplomatic passport, Malta crimson passport, Catholic Order passport, Passport with limited recognition, Historical travel documents, UN observer status Malta Order, 500 passport holders worldwide