மலைக்க வைக்கும் கணக்கு: தாலிபான்களின் மொத்த சொத்து மதிப்பு வெளியானது
இரண்டே வாரத்தில் ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றியுள்ள தாலிபான் பயங்கரவாத குழுவின் மொத்த சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
உலகின் பணக்கார பயங்கரவாத குழுவாக தாலிபான்கள் தற்போது அடையாளம் காணப்படுகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பணம், போதை மருந்தால் உருவாக்கிய தொகை மட்டுமின்றி எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களும் தற்போது தாலிபான்கள் வசம் உள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மேற்கொண்ட ஒப்பந்தத்தால், தற்போது அமெரிக்க துருப்புகள் வெளியேறியுள்ளது. இந்த நிலையில், இரண்டே வாரத்தில் ஆப்கானிஸ்தானை துப்பாக்கி முனையில் கைப்பற்றியுள்ளது தாலிபான் பயங்கரவாத குழு.
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களில் இரும்பு, தாமிரம், தங்கம், நிலக்கரி மற்றும் இதர தாதுக்களால் நிரம்பியுள்ளன, இது சுமார் 2 டிரில்லியன் டொலர் மதிப்புடையது என்று ஆப்கானிஸ்தான் சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2010ல் சுமார் 1.8 பில்லியன் பீப்பாய்கள் அளவுக்கான எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு மட்டும் 100 பில்லியன் பவுண்டுகள் என தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி போரால் சின்னாபின்னமான ஆப்கானிஸ்தானில் லித்தியம் தாது குவிந்து காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
போருக்காகவே பல ஆண்டுகளை செலவிட்ட ஆப்கானிஸ்தான் நிர்வாகம் இயற்கை வளங்களை மீட்டெடுக்க தவறியது. இனி அவை அனைத்தும் தாலிபான்களின் கைகளில்.
தற்போது தாலிபான்களுடன் நெருக்கம் காட்டும் சீனா, ரஷ்யா நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படலாம். ஆப்கானிஸ்தானில் 2.2 பில்லியன் டன் இரும்பு தாது, (மதிப்பு 250 பில்லியன் பவுண்டுகள்), மற்றும் சுமார் 2,700 கிலோ தங்கம் (மதிப்பு 123 மில்லியன் பவுண்டுகள்). மட்டுமின்றி 500 மில்லியன் பீப்பாய்கள் அளவுக்கு இயற்கை எரி வாயுவும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இரும்பு தாது, பளிங்கு, தாமிரம், தங்கம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாதுக்களால் ஆண்டுக்கு 335 மில்லியன் பவுண்டுகளை தாலிபான்கள் வருவாயாக ஈட்ட உள்ளனர்.