125 அடியில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை! இந்திய நகரம் ஒன்றில் திறப்பு
இந்திய மாநிலம் ஆந்திராவில் டாக்டர் அம்பேத்கரின் சிலை நாளை திறக்கப்படுகிறது.
விஜயவாடாவில் 'ஸ்மிருதி வனம்' என்று இடத்திற்கு பெயரிடப்பட்டு அங்கு டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைப்பட்டது.
இந்த சிலையின் உயரம் 125 அடி ஆகும். 81 அடி பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதை சேர்த்து கணக்கிட்டால் உயரம் 206 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை உருவாக்க சுமார் 400 டன் எஃகு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை நாளை திறந்து வைக்கிறார்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி தனது குறிப்பில், ''பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை, அனைத்து துறைகளிலும் மாற்றியமைத்த மாபெரும் ஆளுமை டாக்டர் அம்பேத்கர்'' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |