பிரித்தானியா, அமெரிக்காவை விட பாதுகாப்பான நாடு எது தெரியுமா?
உலகளாவிய பாதுகாப்பு தரவரிசை குறித்த சமீபத்திய பட்டியல் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
உலகின் பாதுகாப்பான நாடுகள்
உலகெங்கிலும் இருந்து பயனர் சமர்ப்பித்த தரவைப் பயன்படுத்தி குற்ற விகிதங்கள், பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் கருத்து மற்றும் சட்ட அமலாக்கத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு நாடும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில் 147 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் அமெரிக்கா 50.8 புள்ளிகளுடன் 89வது இடத்தையும், பிரித்தானியா 51.7 புள்ளிகளுடன் 87வது இடத்தையும் பிடித்துள்ளன.
அதே சமயம் இந்தியா 55.7 புள்ளிகள் பெற்றதன் மூலம் 66வது இடத்தைப் பிடித்துள்ளது. ஆனால் அண்டை நாடான இலங்கை 59வது இடத்தைப் பிடித்து இந்தியாவை முந்தியுள்ளது.
அன்டோரா
ஆச்சரியம் அளிக்கும் விதமாக சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா (Andorra) 84.7 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்நாடானது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு இடையிலான பைரனீஸ் மலைகளில் மறைந்திருக்கும் வகையில் அமைந்துள்ளது.
குறைந்த குற்ற விகிதங்கள் மற்றும் வலுவான பொது பாதுகாப்பு உணர்வுக்காக அதிக மதிப்பெண்களை இந்நாடு பெற்றுள்ளது.
இப்பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரண்டாவது இடத்தையும், கத்தார் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
வெனிசுலா 19.3 என்ற புள்ளிகளை மட்டுமே பெற்று மிகக் குறைந்த பாதுகாப்புள்ள நாடாக இடம்பிடித்துள்ளது.
முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள்
- அன்டோரா (84.7)
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (84.5)
- கத்தார் (84.2)
- தைவான் (82.9)
- ஓமன் (81.7)
- ஐல் ஆப் மேன் (79.0)
- ஹாங்காங் (78.5)
- ஆர்மீனியா (77.9)
- சிங்கப்பூர் (77.4)
- ஜப்பான் (77.1)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |