உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கை பிடித்துள்ள இடம்: அதற்கான காரணம்
சர்வதேச அளவிலான பலமான கடவுச் சீட்டு தரவரிசையில் இலங்கை 8 இடங்கள் முன்னேறியுள்ளது.
8 இடங்கள் முன்னேறிய இலங்கை
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்(Henley Passport Index) என்ற நிறுவனம் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் உலகின் பலமான மற்றும் சிறந்த கடவுச்சீட்டு தொடர்பான தரவரிசையை வெளியிட்டுள்ளது.
இதில் இலங்கை கடந்த ஆண்டை விட, 2023ல் எட்டு இடங்கள் முன்னேறி 95 வது இடத்தை பிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடவுச்சீட்டை பயன்படுத்தி விசா இல்லாமல் அல்லது ஒன்-அரைவல் விசா முறை மூலம் 41 நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும், இந்த அம்சங்களை அடிப்படையாக கொண்டு தரவரிசைப் பட்டியலில் இந்த ஆண்டு இலங்கை 8 இடங்கள் முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான், நேபாளம், கம்போடியா,சிங்கப்பூர், மாலைதீவு,தஜிகிஸ்தான், பஹாமாஸ், லாவோஸ், டொமினிக்கா, மடகாஸ்கர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய 41 நாடுகளுக்கு இந்த வசதியை இலங்கை கொண்டுவந்துள்ளது.
முதலிடம் பிடித்த நாடு
இதில் 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்த ஜப்பான், இந்த ஆண்டு 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
உலகின் பலமான மற்றும் சிறந்த கடவுச்சீட்டு கொண்ட நாடாக சிங்கப்பூர் மாறியுள்ளது.
கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் இருப்பது குறிப்பிடத்தக்கது. விசா இல்லாத அணுகலை 57 இடங்களுக்கு வழங்கியுள்ள இந்தியாவின் கடவுச்சீட்டு 5 இடங்கள் முன்னேறி 80 வது இடத்தை பிடித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |