உலக கோப்பை டெஸ்ட் இறுதிப்போட்டி: 318 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 318 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவுஸ்திரேலியா
இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
What a start!
— Cricket Australia (@CricketAus) June 7, 2023
A brilliant unbeaten 146 by Travis Head, accompanied by Steve Smith on 95* has our Aussie men in a dominant position after day one of the #WTC23 Final ? pic.twitter.com/XFJRjka1z0
அவுஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஸ்டிவன் ஸ்மித் 268 பந்துகளில் 121 ஓட்டங்களும், ஹெட் 174 பந்துகளில் 163 ஓட்டங்களும் சிறப்பாக குவித்தனர்.
இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 121.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 469 ஓட்டங்கள் குவித்தது.
சரிவில் இந்திய அணி
இரண்டாம் நாள் ஆட்டமான இன்று அவுஸ்திரேலிய அணி ஆட்டமிழந்ததை தொடர்ந்து, இந்திய அணி முதல் இன்னிங்ஸிற்கான பேட்டிங்கில் களமிறங்கியது.
ஆனால் அதில் கேப்டன் ரோகித் சர்மா 15 ஓட்டங்கள், கில் 13 ஓட்டங்கள், புஜாரா 14 ஓட்டங்கள், கோலி 14 ஓட்டங்கள் மற்றும் ஜடேஜா 48 ஓட்டங்கள் என குவித்து ஆட்டமிழந்தனர்.
Gill is leaving the ball in the stumps and getting compared to Babar Azam. Poor Prince. #WTC23Final #WTCFinal2023 #INDvAUS
— Shaharyar Ejaz ? (@SharyOfficial) June 8, 2023
pic.twitter.com/Vjxc8PHspk
ரஹானே மற்றும் பரத் களத்தில் நிற்கும் நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 38 ஓவர்கள் வரை எதிர்கொண்டுள்ள இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்கள் மட்டுமே குவித்துள்ளது.
அத்துடன் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணியை விட 318 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி உள்ளது.