காணாமல் போன உலகின் விலையுயர்ந்த போர் விமானம் (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான மோதல் வளர்ந்துகொண்டே செல்கிறது. அடுத்த கட்டமாக, இரு நாடுகளும் மாறி மாறி பயண எச்சரிக்கைகள் விடுத்துள்ளன.
அமெரிக்காவுக்கு சொந்தமான உலகின் விலையுயர்ந்த போர் விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அதன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில், ரஷ்யா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்திய கனடா மோதலையடுத்து கனேடிய பிரஜைகளுக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனின் வெற்றியை உறுதி செய்வது நட்பு நாடுகளின் பொறுப்பாகும் என லிதுவேனிய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |