கிரீஸில் தரையில் மோதி நொருங்கிய விமானம்:விமானிகள் உயிரிழப்பு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் கான்சு (Gansu)மாகாணத்தில் உள்ள ஷான்டன் (Shandan) பௌத்த விகாரையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 115 மீற்றர் உயரம் கொண்ட பிரம்மாண்ட புத்தர் சிலை சேதம் அடைந்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்திய கடற்கரையொன்றில் 51 திமிங்கிலங்கள் கரையொதுங்கி உயிரிழந்துள்ளன என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்றைய தினம் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு 90 நிமிடங்கள் வரை துண்டிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரீஸ் நாட்டில் பாரிய காட்டுத்தீ 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.