எட்டாவது நாளில் இஸ்ரேல் - ஈரான் போர்... எந்த நாடு யாருக்கு ஆதரவு: வெளிவரும் புதிய தகவல்
இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலக நாடுகள் இரண்டு முகாம்களாகப் பிரிந்து கிடப்பது போல் தெரிகிறது.
முடிவுக்குக் கொண்டுவருமாறு
ஒருபுறம், இஸ்ரேலை வெளிப்படையாக ஆதரித்து வரும் அமெரிக்கா, ஈரான் மீது சாத்தியமான தாக்குதலுக்கு கூட தயாராகி வருகிறது. மறுபுறம், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மோதலில் தலையிடுவதற்கு எதிராக அமெரிக்காவை எச்சரித்துள்ளன.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஈரானை வெளிப்படையாக ஆதரித்துள்ளதுடன், இஸ்ரேல் உடனடி போர்நிறுத்தத்திற்கு தயாராக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், சர்வதேச மோதல்களைத் தீர்ப்பதற்குப் போர் ஒருபோதும் சரியான வழி அல்ல என்று கூறிய ஜி, அமைதியான பேச்சுவார்த்தைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மட்டுமின்றி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் ஒரு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு சீன ஜனாதிபதி ஜின்பிங் பேச்சுவார்த்தைகளின் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த உரையாடலின் போது, இரு தலைவர்களும் மேற்கு ஆசிய பிராந்தியத்தின் நிலைமை குறித்து விவாதித்தனர், மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், குறிப்பாக இஸ்ரேல், விரைவில் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருமாறு அழைப்பு விடுத்தனர்.
கடந்த வாரம்தான், ஈரானின் அணு, ஏவுகணை மற்றும் இராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் இஸ்ரேல் மீது எதிர் தாக்குதல்களைத் தொடங்கியது.
உலக வல்லரசுகளுக்கு இடையே
இதற்கிடையில், ரஷ்யா அமெரிக்காவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு போரில் உதவினால், அதன் விளைவுகள் மிகவும் அபாயகரமாக இருக்கும் என்று ரஷ்யா கூறியுள்ளது.
இந்த எச்சரிக்கை, முக்கிய உலக வல்லரசுகளுக்கு இடையேயான பிளவுகள் எவ்வளவு ஆழமாகி வருகின்றன என்பதைக் காட்டுகிறது. முன்னதாக, சீனாவும் ஐக்கிய அரபு அமீரகமும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தன.
ஈரானின் அணுசக்தி பிரச்சினையைத் தீர்க்க ஒரு இராஜதந்திர தீர்வை அவர்கள் கோரினர். மேலும், ஜனாதிபதி புடின் ஐக்கிய அரபு அமீரக தலைவர்களுடன் தொலைபேசியில் நிலைமையைப் பற்றி விவாதித்தார்.
இதற்கிடையில், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஜேர்மனி, கனடா, பிரித்தானியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் இஸ்ரேலை ஆதரித்து ஈரானின் அணுசக்தி திட்டத்தை எதிர்த்தன. மறுபுறம், ரஷ்யா, சீனா, ஈராக், லெபனான், பாகிஸ்தான், துருக்கி மற்றும் எகிப்து ஆகியவை ஈரானை ஆதரிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |