உலகிலே எந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணம் அனுப்புகிறார்கள் தெரியுமா? உலக வங்கி அறிவிப்பு
உலகிலே வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணம் அனுப்பப்படும் நாடாக இந்தியா உள்ளதாக, உலக வங்கி கூறியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். அப்படி வேலை செய்து கிடைக்கும் பணத்தினை தங்களுடைய குடும்பங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அந்த வகையில், உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணம் அனுப்பப்படும் நாடாக இந்தியா உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள மதிப்பில், வெளிநாடுகளில் இருந்து நடப்பு 2021 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்படும் தொகையின் மதிப்பு 8 ஆயிரத்து 700 கோடி டொலராக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.
இது இந்திய மதிப்பில் 6 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு சமம் ஆகும். அமெரிக்கா, சவுதி அரேபியா, குவைத் போன்ற வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகையின் அடிப்படையில் இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து சீனா, மெக்சிகோ, பிலிப்பைனஸ், எகிப்து ஆகிய நாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகம் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.