உலகின் மிகப்பெரிய சைபர் தாக்குதல்: கிரிப்டோ நிறுவனத்திடம் ரூ.60000 கோடி திருட்டு
Worlds biggest Crypto heist 60000 cr stolen off: உலகின் மிகப்பெரிய சைபர் தாக்குதலில், கிரிப்டோ பரிவர்த்தனை தளமான பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 6.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சைபர் தாக்குதல்
கடந்த 29ம் திகதி உலகின் மிகப்பெரிய கிரிப்டோ பரிவர்த்தனை தளமான பைனான்ஸ்(Binance) நிறுவனத்தை குறிவைத்து மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே அரங்கேறிய இந்த துணிகரத் தாக்குதலில் பைனான்ஸ் நிறுவனத்தின் சுமார் 6.3 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான(இந்திய ரூபாய் மதிப்பில் 60,000 கோடி) கிரிப்டோ கரன்சிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோ வரலாற்றிலேயே இது தான் மிகப்பெரிய சைபர் திருட்டு என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பக்கட்ட விசாரணை
பைனான்ஸ் நிறுவனம் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணையின்படி, ஹேக்கர்களால் தொழில்நுட்ப பிரிவு ஊழியர் ஒருவரின் மடிக்கணினி முடக்கப்பட்டு இந்த சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
பிட்காயின், எதிரியம் மற்றும் சொலானா ஆகிய பல்வேறு பிளாக்செயின் நெட்வொர்க்குகளில் இருந்து இந்த தொகையானது ஒரே வளைவில் வெளியேற்றப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தில் பயனர்களின் தனிப்பட்ட சாவிகள் எதுவும் கசியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சைபர் திருட்டு சம்பவத்தின் பின்னணியில் வட கொரியாவை சேர்ந்த ஹேக்கர் குழுவினர்கள் இருக்கலாம் என்று பிளாக்செயின் பாதுகாப்பு நிறுவனங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
பிளாக்செயின் நிறுவனங்களின் உதவியுடன் கொள்ளையடிக்கப்பட்ட 6.3 பில்லியன் டொலர் சொத்துகளில் சுமார் 3 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்கள் உடனடியாக முடக்கப்பட்டுள்ளது.