உலகிலேயே உயரமான பாலம் திறப்பு: கின்னஸ் சாதனைகள் முறியடிப்பு
உலகிலேயே உயரமான பாலம் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ள பாலம் ஒன்று சீனாவில் திறக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே உயரமான பாலம்
தென்மேற்கு சீனாவிலுள்ள Guizhou என்னுமிடத்தில், செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி இந்தப் பாலம் திறக்கப்பட்டுள்ளது.
625 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள The Huajiang Grand Canyon Bridge என்னும் அந்தப் பாலம், முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது.
மேலும், 2,890 மீற்றர் நீளம் கொண்டதால், மலைப்பகுதி ஒன்றில் இரண்டு தூண்களுக்கிடையே கட்டப்பட்ட பெரிய பாலம் என்னும் சாதனையையும் முறியடித்துள்ளது இந்தப் பாலம்.
முன்பு Huajiang பள்ளத்தாக்கை சாலை மார்க்கமாகக் கடக்க ஒரு மணி நேரம் பிடித்த நிலையில், தற்போது இந்த பாலம் வழியாக வாகனம் ஒன்றில் சுமார் ஒரு நிமிடத்தில் மறுபக்கம் சென்றுவிட முடிகிறது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |