உலகின் உயரமான பெண் 23 வயதில் மரணம்: உயிரைப் பறித்த ஜலதோஷம்...
உலகின் உயரமான பெண் என அறியப்படும் இளம்பெண் ஒருவர், ஜலதோஷத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளால் தனது 23ஆவது வயதில் மரணமடைந்துள்ளார்.
உலகின் உயரமான பெண் என அறியப்படும் இளம்பெண்
சீனாவைச் சேர்ந்த Xiao Mo, 7அடி 5 அங்குல உயரம் கொண்டவர். உலகின் உயரமான பெண் என அழைக்கப்படும் Xiao Mo, சீன சமூக உடகங்களில் பிரபலமானவர் ஆவார்.
Credit: AsiaWire
தனது அசாதாரண உயரம் காரணமாக இதயப் பிரச்சினை உட்பட அவருக்கு பல உடல் நலப் பிரச்சினைகள் இருந்தன. இந்நிலையில், ஜல்தோஷம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உருவான பிரச்சினைகளால், Xiao Mo இம்மாதம், அதாவது ஜனவரி மாதம் 15ஆம் திகதி மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Credit: AsiaWire
சமூக ஊடகப் பிரபலம்
தனது வாழ்வைக் குறித்த தகவல்களை சீன சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டுவந்த Xiao Moவை 152,000 பேர் பின்தொடர்கிறார்கள்.
Xiao Moவை அவரது தாயும் தந்தையும் கைவிட்டுவிட்டதால், அவரது தாத்தா பாட்டிதான் அவரை வளர்த்தார்கள். Xiao Moவின் உடல் தகனம் செய்யப்பட்டபின்பு, அவரது அஸ்தியைக்கூட இதுவரை அவரது தந்தை பெற்றுக்கொள்ள வரவில்லை என கூறப்படுகிறது.
Credit: AsiaWire
Xiao Mo உலகின் உயரமான பெண் என சிலரால் அழைக்கப்பட்டாலும், உண்மையில், துருக்கி நாட்டவரான 7 அடி 7 அங்குல உயரமுடைய, Rumeysa Gelgi என்னும் பெண் தான் உலகின் உயரமான பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: AsiaWire
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |