உலகின் சக்திவாய்ந்த டாப் 5 விமானப் படைகள்: தாய் நாட்டின் பலத்தை காட்டும் விமானிகள்
உலக அளவில் குறிப்பிட்ட சில நாடுகளே வான் பாதுகாப்பு மற்றும் விமானப்படை பலத்தில் முன்னணியில் திகழ்கின்றன.
இவை தங்களின் தொழிநுட்ப உச்சநிலை முதல் அதிகபட்ச பணியாளர்கள் எண்ணிக்கை வரை முதன்மை வகிக்கின்றனர்.
அந்தவகையில் உலக அளவில் 5 மிகப்பெரிய விமானப்படை நாடுகள் குறித்து இதில் ஆராயப்பட்டுள்ளது.
உலகின் டாப் 5 விமானப் படைகள்
அமெரிக்கா:
பென்டகனை தமைமையிடமாக கொண்ட அமெரிக்க வான்படை உலகின் மிகவும் சக்திவாய்ந்த விமானப் படையாக(USAP) உள்ளது.
அமெரிக்க விமானப் படை கிட்டத்தட்ட 37,000 பேரை ஒவ்வொரு ஆண்டும் பணியமர்த்துகிறது.
மேலும் 5,200 க்கும் மேற்பட்ட விமானங்களை USAP இயக்குகிறது. அத்துடன் அமெரிக்க விமானப்படையில் 3,30,000 பணியாளர்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வலுவான ஆதரவை வழங்குகின்றன.
ரஷ்யா
ரஷ்யாவிடம் தோராயமாக 1,70,000 விமானப் படை பணியாளர்கள் உள்ளன.
ரஷ்ய கடற்படையிடம் மட்டும் சுமார் 4,211 விமானங்கள் உள்ளன, இவை 4000 முதல் 5000 தயார் நிலையில் உள்ள விமானிகளால் இயக்கப்படுகின்றன.
ரஷ்யாவின் முக்கிய போர் விமானங்களாக SU-57, SU-30 மற்றும் SU-35 ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சீனா
சீனாவின் விடுதலை மக்கள் விமானப் படையில் 3,304 முதல் 3,500 விமானங்கள் 4000 தயார் நிலை விமானிகளால் இயக்கப்படுகிறது.
சீனா சோவியத் கால கட்டமைப்பில் இருந்து தற்கோது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட கடற்படையின் விமானம் தாங்கி கப்பல் பூஜியான் வரை பரிணாமம் அடைந்துள்ளது.
இந்தியா
இந்திய விமானப்படை ஆசியாவின் சக்தி வாய்ந்த விமானப்படைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை 3,834 தயார் நிலையில் உள்ள விமானிகள் விமானப்படை விமானங்களை கையாளுகின்றனர்.
இந்தியாவிடம் IAF Hawk MK-132, Kiran Mkl/IA முதல் ரபேல், SU-30Mkl, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட் தேஜாஸ் மற்றும் ஜாகுவார் போர் விமானங்கள் வரை வரிசை கட்டியுள்ளன.
மேலும் இந்தியாவின் எதிர்கால திட்டமாக அமெரிக்காவின் f-21 மற்றும் SU-57 ஆகியவையும் உள்ளன.
ஜப்பான்
ஜப்பான் விமானப்படை 50,000 பணியாளர்களால் ஆதரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 1,459 விமானங்களை இயக்க தோராயமாக 2000 முதல் 2500 விமானிகள் தயார் நிலையில் உள்ளனர்.
அமெரிக்காவிற்கு பிறகு ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் இரண்டாவது பெரிய நாடாக ஜப்பான் உள்ளது.
ஜப்பானிடம் மிட்சுபிஷி F-15J, மிட்சுபிஷி F-2 மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் F-35A ஆகிய விமானங்கள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |