பச்சை ரத்த உணவு சாப்பிட்டதால் காலின் உட்பகுதியில் நெளிந்த புழுக்கள்!
காலில் புழு நெளிவதைக் கண்டு பதறி அடித்து வைத்தியசாலைக்கு சென்ற பெண்னுக்கு காத்திருந்த அதிர்ச்சி..
உடலின் உள்ளே புழுக்கள் நெளிவதைக் கண்ட 58 வயதான பெண் மருத்துவர் ஒருவரை நாடினார்.
நடந்தது என்ன?
மாட்டிறைச்சி மற்றும் பச்சை இரத்தத்தால் செய்யப்பட்ட "Tiet canh" என்ற பிரபலமான உணவை உட்கொண்டுள்ளார்.
இதனால் திடிரென்று வைத்தியரை நாடிய பெண்ணுக்கு பக்கவாதம் இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் ஸ்கேன் செய்த உடன் தான் உண்மை அதிர்ச்சி காத்திருந்தது.
புழுக்கள் அவளது மூளையில் கூடு கட்டியும் அவளது கைகால்களில் திரண்டிருந்தன என்று தெரிவித்துள்ளன.
வைத்தியர் கூறிய கருத்து என்ன?
பச்சை இரத்ததில் செய்யப்பட்ட உணவை உட்க்கொண்டதால் தான் அந்த பெண்னுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இதற்கான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இவரது உடல் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்று இருக்கும் என கூறுகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் கூறிய கருத்து
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், மாதத்திற்கு ஒருமுறை தான் பச்சை ரத்த புட்டு சாப்பிடுவதாகவும்.
தானே அதனை தயாரித்து சாப்பிட்டதாகவும், அதனால் எந்த நோயும் இருக்காது என்று நினைத்தேன்.
ஆனால், சமைக்கப்படாத ரத்தம் அதில் இருந்ததால் இந்த உணவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.