மோசமான நாடுகளில் ஒன்று - கனடாவை கடுமையாக தாக்கிய டிரம்ப்
Trump slams Canada amid trade war escalation: கனடாவை மோசமான நாடுகளில் ஒன்று என டிரம்ப் கடுமையாக தாக்கியுள்ளார்.
அமெரிக்கா-கனடா இடையிலான வர்த்தக உறவுகள் மீண்டும் கடுமையான நிலைக்கு சென்றுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கனடாவை “உலகில் ஒப்பந்தம் செய்ய மிகவும் மோசமான நாடுகளில் ஒன்று” எனக் கூறியுள்ளார்.

இறுதி நேரத்தில் முறிந்த ஒப்பந்தம்
கடந்த வாரம் இரு நாடுகளும் புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, இறுதி நேரத்தில் ஒப்பந்தம் முறிந்தது. இதனால் அமெரிக்கா, கனடாவின் சில முக்கிய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தது.
அதற்கு பதிலாக கனடா, நூற்றுக்கணக்கான அமெரிக்கப் பொருட்களுக்கு அதே அளவு வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது.
டிரம்ப் குற்றம்சாட்டு
டிரம்ப், “கனடா எங்களை ஒரு மாநிலம் போல பயன்படுத்துகிறது. ஆனால் அவர்கள் அரசே அல்ல. அவர்கள் எங்களை பல ஆண்டுகளாக தவறாக பயன்படுத்தி வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “நாம் அவர்களுடன் வர்த்தகம் செய்யாமல் இருந்தாலும் பெரிய பாதிப்பு இல்லை. சில சிரமங்கள் இருந்தாலும், வேறு நாடுகளில் இருந்து பொருட்களை வாங்க முடியும்” எனக் கூறினார்.
இந்த நிலைமை குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி, “அமெரிக்கா இறுதி நேரத்தில் கூடுதல் நிபந்தனைகளைச் சேர்த்ததால் ஒப்பந்தம் முறிந்தது” என விளக்கம் அளித்தார்.
ஆனால் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், “கனடா தான் காரணம். அவர்கள் கடைசி நேரத்தில் அநியாயமான கோரிக்கைகளை வைத்தனர்” எனக் கூறினார்.
மேலும் சர்ச்சை..
இந்நிலையில், டிரம்ப் தனது பேட்டியில் “Lake Ontario-வை Lake America என்று பெயர் மாற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வர்த்தக போர் காரணமாக, இரு நாடுகளிலும் பொருட்களின் விலை உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா-கனடா உறவுகள் மீண்டும் சிக்கலான நிலைக்கு சென்றுள்ளதால், உலக வர்த்தக சந்தையிலும் அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |