நேபாள வெள்ளம்: நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு, இந்தியர்கள் உட்பட பலர் காணவில்லை
Nepal flash floods hundreds missing: நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பேரழிவு வெள்ளம் 157 பேரின் உயிரை பறித்துள்ளது.
750-க்கும் மேற்பட்டோர் காணவில்லை
750-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் குறைந்தது 133 இந்தியர்கள், குறிப்பாக 37 தமிழர்கள், மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அடங்குவர்.

இந்த வெள்ளம் திபெத் பகுதியில் ஏற்பட்ட 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மூன்று நிமிடங்களில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பனிச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்பதால், அதுவே வெள்ளத்திற்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வெள்ளம் போதே கோஷி ஆற்றில் பாய்ந்து, ராசுவா மற்றும் தாடிங் மாவட்டங்களை கடுமையாக பாதித்தது. திமுரே, சியாப்ரு பேசி போன்ற பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தன. வீடுகள், வாகனங்கள், பாலங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
95 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 100 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, காத்மண்டுவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த...
இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு சென்ற 50 யாத்திரிகர்கள் காணாமல் போயுள்ளனர். தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த 37 சுற்றுலா பயணிகளும் தொடர்பில் இல்லை.
இந்த பேரழிவால் 354 மெகாவாட் திறன் கொண்ட 8 நீர்மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் 19 பாலங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் கடினமாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன் பேசி, அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார். இந்திய தூதரகம் அவசர எண்களை வெளியிட்டு, காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
நேபாள அரசு 12 ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சீனாவும் தன் எல்லைப் பகுதியில் மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்த பேரழிவு நேபாளத்தின் வடக்கு எல்லையில் மிகப்பெரிய மனிதாபிமான மற்றும் கட்டமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |