டி20யில் 13 ஓட்டங்களுக்கு சுருண்ட அணி! 238 ரன் வித்தியாசத்தில் அமீரகம் இமாலய வெற்றி
GCC மகளிர் டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சவூதி அரேபியாவை வீழ்த்தியது.
251 ஓட்டங்கள் குவிப்பு
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா அணிகளுக்கு இடையிலான GCC மகளிர் டி20 போட்டி நடந்தது. 
முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணியில் தீர்த்தா சதீஷ் 64 (35) ஓட்டங்கள் விளாசினார்.
சமைரா 52 பந்துகளில் 85 ஓட்டங்களும் (2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள்), கேஸியா மிரியம் சபின் 31 பந்துகளில் 54 ஓட்டங்களும் (1 சிக்ஸர், 8 பவுண்டரிகள்) எடுத்தனர்.
இதன்மூலம் ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ஓட்டங்கள் குவித்தது.
8 வீராங்கனைகள் டக்அவுட்
பின்னர் ஆடிய சவூதி அரேபியா அணி 9.4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு சுருண்டது. 8 வீராங்கனைகள் டக்அவுட் ஆகினர்.
அதிகே சில்வா 4 விக்கெட்டுகளும், ஈஷா ஓஸா 3 விக்கெட்டுகளும், மேஹாக் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், அல் மஸீரா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |