WWE நட்சத்திரம் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக அதிரடி கைது!
அமெரிக்காவில் பிரபல WWE வீராங்கனை லிவ் மோர்கன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பொலிஸாரால் கைது
2014ஆம் ஆண்டில் NXT-யில் தனது பயணத்தை தொடங்கிய வீராங்கனை லிவ் மோர்கன் (Liv Morgan).
29 வயதாகும் இவர் பின்னர் WWEயில் பங்கேற்று நட்சத்திரமாக உயர்ந்தார். இந்த நிலையில் புளோரிடா பொலிஸார் இவரது வாகனத்தை அணுகியபோது கஞ்சா வாசனை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வாகனத்தில் மரிஜுவானா அடங்கிய சிறிய பிளாஸ்டிக் பை மற்றும் எண்ணெய் போன்ற பொருள் வைத்திருந்த Vape பேனா ஆகியவை காணப்பட்டதாக நம்பப்படுகிறது.
விடுவிப்பு
அதன் பின்னர் அவை சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அதுவும் மரிஜுவானா என்று கண்டறியப்பட்டது.
எனினும் லிவ் மோர்கன் கைது செய்யப்பட்ட அன்றைய இரவில் 3,000 டொலர் பத்திரம் மூலம் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நியூ ஜெர்சியைச் சேர்ந்த லிவ் மோர்கன் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
WWE.com
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |